மயிலாடுதுறை கலைஞர் நகரில் தீவிபத்து ஒரு குடிசை வீடு சேதம். சவ ஊர்வலத்தின் போது வெடித்த வெடியால் தீ விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. கொழுந்துவிட்டு எரியும் தீயை பொதுமக்கள் அணைக்கும் நேரடி காட்சிகள். விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்புத் துறையினர்.
மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியான கச்சேரி சாலையில் கலைஞர் நகர் உள்ளது. இந்த நகரில் உள்ள முதலாவதாக உள்ள குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது. இதனைக் கண்டு பதறிய அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் அப்பகுதி புகைமண்டலமாக மாறியது. உடனடியாக அருகாமையில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் தீ பரவாமல் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கச்சேரி சாலையில் சென்ற சவ ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததில் குடிசை வீடு தீ விபத்திற்கு உள்ளானதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.