விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையம் சார்பில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு வெம்பக்கோட்டை அணையில் உள்ள தண்ணீரில் எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் சிக்கினால் சிக்கியவர்களை மீட்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தூர்பாண்டியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கியவர்கள் மற்றும் தத்தளிப்பவர்களை மீட்பது குறித்து பொது மக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. நீச்சல் தெரியாமல் ஆறு, குளம்,கண்மாயில் குளிக்க முயற்சி செய்யக் கூடாது நீச்சல் தெரியாமல் பலியானவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
ஆகையால் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் நீர்நிலைகளில் இறங்க முயற்சி செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது . இந்நிகழ்ச்சியை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளானோர் பார்வையிட்டனர்.