வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் ஒத்திகை நடத்தப்பட்டது.
ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் நேரில் பார்வையிட்டார்.

இந்த நிகழ்வில் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் மழைக்காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி?
வெள்ளத்தில் சிக்கியவர்கள் தாமாகவே தப்பிப்பது எப்படி?
என்பது குறித்து தத்ரூபமாக செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்.
மனித உருவத்தை போல் செய்யப்பட்ட பொம்மை நீர்த்தேக்க தண்ணீருக்குள் விடப்பட்டு, அதனை தீயணைப்புத் துறையினர் படகில் சென்று மீட்பது போல செயல்முறை விளக்கம் காட்டப்பட்டது.
வீட்டைச் சுற்றி வெள்ளம் சூழும் போதே வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி தப்பிப்பது? என்பது குறித்தும் விளக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளை தீயணைப்புத் துறையினருடன், தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் படகில் ஏறி சென்றுபார்வையிட்டார்.
பேரிடர் காலங்களில் மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள அரசு நடத்தும் இதுபோன்ற ஒத்திகை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் பார்வையிட்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என கலெக்டர் ரஞ்சித் சிங் அறிவுறுத்தியுள்ளார்.








