• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் பற்றிய தீ..,

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன் பிடி துறைமுக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.தீயணைக்கும் பணி தீவிரம் .

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன் பிடி துறைமுக வளாகத்தில்
மீன்கள் விற்பனை செய்ய பயன்படுத்தபடும் உபகரணங்கள் விற்பனை செய்யும் நான்கு கடைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது,

இதை பார்த்த மீனவர்கள் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Box உட்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமான நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீபற்றியதில் ஏற்பட்ட இழப்புகள் பற்றிய விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.