• Mon. Jan 20th, 2025

கார் ஒர்க் ஷாப்பில் தீ விபத்து – மூன்று வாகனங்கள் எரிந்து நாசம்

BySeenu

Mar 24, 2024

கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமாக காந்திபுரம், பாப்பநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கலைமகள் பள்ளி அருகே நான்கு சக்கரம் பழுது பார்க்கும் நிலையம் உள்ளது. அதன் அருகே இருந்த காலி இடத்தில் பழுது பார்க்க வந்த 8 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த குப்பைகள் மீது தீப்பற்றி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நான்கு சக்கர வாகனத்தின் மீது பரவி மளமள என எரியத் தொடங்கியது. இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் மத்திய தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் அனைத்தனர். இதில் அங்கு நிறுத்தி வைத்து இருந்த 3 நான்கு சக்கர வாகனங்கள் முழுவதும் தீப்பற்றி சேதமடைந்தது, மேலும் அங்கு இருந்த 5 வாகனங்கள் லேசான தீப்பற்றி சேதம் அடைந்து உள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் ஒர்க்ஷாப்பில் யாரும் வேலைக்கு வரவில்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.