• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

குடோனில் ஏற்பட்ட தீ விபத்து..,

ByAnandakumar

May 3, 2025

கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த மைலம்பட்டி பகுதியில் தரகம்பட்டி செல்லும் சாலையில் அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான இடத்தில் தோகமலை பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவர் விவசாய தேவைக்கு பயன்படுத்தப்படும் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதே இடத்தில் சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்கும் உபகரணங்களான பைப், மோட்டார், ஒயர்கள் உள்ளிட்டவை அதிக அளவில் அடுக்கி வைக்கும் குடோனும் அமைத்துள்ளார்.

இந்த குடோனில் சற்று முன்னர் ஏற்பட்ட தீ விபத்தில் உள்ளே வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு மீட்புப்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.