• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிக சத்தம் எழுப்பும் வாகனங்களுக்கு அபராதம்..,

ByKalamegam Viswanathan

Jul 11, 2025

மதுரை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் மதுரை போக்குவரத்து காவல்துறை ஆணையர் எஸ் வனிதா உத்தரவின் பெயரில்.. மதுரை மாநகர் பகுதிகளில் அதிக சப்தம் எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்,,இசை ஒலிப்பான், மற்றும் காற்று மாசு(air pollution ) ஏற்படுத்தும் ஒலிப்பான் (musical horn.. Air horn) பயன்படுத்தி வரக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை மதுரை மாநகர காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை, மற்றும் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோர்களால் இணைந்து வாகன தணிக்கை மற்றும் பரிசோதனை செய்து அத்தகைய காற்று மாசுதல் ஏற்படுத்தக்கூடிய (air pollution ) ஒலிப்பான்களை பயன்படுத்தி வந்த வாகனங்களை பரிசோதனை செய்து அதற்கு அபராதம் விதித்து அந்த ஒலிப்பான் குழாய்களை பறிமுதல் செய்தனர்.

இதில் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் 20 பேருந்து களுக்கு அபராத மிதித்து ஒலிப்பான்களே பறிமுதல் செய்தனர். மேலும் அத்தகைய வாகனங்களுக்கு மேற்கொண்டு இயக்கி வந்தால் அதனது பெர்மிட் என்று சொல்லக்கூடிய அனுமதி சீட்டை ரத்து செய்ய விடும் என்று எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

மேலும் இத்தகைய பரிசோதனையானது அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்று மூன்று துறைகளும் இணைந்து அறிவித்தனர். இதல் காவல்துறையின் சார்பாக திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி கரிமேடு போக்குவரத்து சார்பு ஆய்வாளர் சந்தன குமார் வடக்கு ஆர்டிஓ சித்ரா தெற்கு ஆர்டிஓ திரு கார்த்திகேயன் மத்திய ஆர் டி ஓ பாலமுருகன் மற்றும் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்கள் செல்வம், முரளி,மனோகரன் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குணசீலன் கிருஷ்ண பிரசாத் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து காவல் அதிகாரிகள் சொல்லும் பொழுது இத்தகைய காற்று மாசு படுத்தக்கூடிய ஒலிப்பான்கள் இசை ஒலிப்பான்கள் ஏர்காரன் என்று சொல்லக்கூடிய ஒலிப்பான்களால் சாலையில் செல்லும் பொழுது பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சாலையில் விலங்குகளும் அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு அதனால் விபத்து ஏற்படும் அபாயகரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது கிட்டையே அதிக சத்தத்தினால் காற்றிலும் மாசுபாடுகள் அதிக அளவில் ஏற்படுகின்றன.

இதனை தடுக்கும் பொருட்டு இத்தகைய காவல்துறை போக்குவரத்து துறை மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒன்றாக இணைந்து இதுபோன்று அவ்வப்போது வாகன தணிக்கைகள் மற்றும் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.