• Sun. Dec 28th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திருமணத்திற்கு நிதி உதவி மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கும் விழா..,

ByS. SRIDHAR

Dec 28, 2025

புதுக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி மற்றும் எட்டு கிராம் தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி மற்றும் எட்டு கிராம் தங்கம் உள்ளிட்டவற்றை அமைச்சர் ரகுபதி மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி,

எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு நான் ஏற்கனவே நேற்று அறிக்கை வாயாக பதில் அளித்துள்ளேன். எங்களுடைய தலைவரை ஒருவர் சவாலுக்கு கூப்பிடும்போது நாங்கள் எப்படி பதில் அளிக்காமல் இருக்க முடியும் அது ஒவ்வொரு திமுக தொண்டனின் கடமை
அதைத்தான் நான் செய்துள்ளேன்.

நாங்கள் வான்டட் ஆக வண்டியில் ஏற வேண்டிய அவசியம் இல்லை. ஐந்து சதவீதம் தான் அதிமுக அரசு செய்தது வீரமுள்ள 95 சதவீதத்தை நாங்கள் தான் முடித்து பணிகளை திறந்து வருகிறோம்

அவர்கள் ஆட்சியில் டெண்டர் விட்டு கமிஷன் வாங்கியதோடு சரி டென்டலுக்கு பணம் செட்டில் செய்து விட்டு பணிகளை முடித்து திறப்பு விழா நாங்கள் தான் செய்து வைக்கிறோம்.

அதிமுக ஆட்சியில் சட்டசபையில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு அவர்கள் அனுமதி அளிக்கவில்லை முயலவில்லை ஆனால் திமுக அரசு பொறுப்பற்றவுடன் கேள்வி நேரத்தை நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறோம்.

பணத்தை எப்படி பதுக்குவது எப்படி ரயிலில் அனுப்புவது ரயில் அனுப்பி பிடிப்பட்ட உடன் அதிலிருந்து எப்படி தப்புவது என்பது குறித்து எல்லாம் பாஜக தலைவர் நைனார் நாகேந்திரனுக்கு தான் தெரியும்.

எங்களுக்கு அதெல்லாம் தெரியாது

தனியாக வந்தாலும் கூட்டணியாக வந்தாலும் அதில் ஒரு சஸ்பென்ஸ் இருக்க வேண்டும் என்று நேற்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஜனநாயகம் ஆடியோ விழாவில் பேசியுள்ளது. குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி
யார் தனியாக வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை கூட்டணியோடு வந்தாலும் கவலையில்லை சஸ்பென்சை நாங்கள் உடைக்க விரும்பவில்லை
சஸ்பென்ஸ் தொடரட்டும் யாராவது போய் சேரட்டும் சேர்ந்தால் கூட்டணியாக வரட்டும் இல்லையென்றால் தனியாக வரட்டும்.

நாங்கள் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை எங்கள் தலைவர் தைரியமானவர

அரசு ஊழியர்களை அரவணைத்து செல்வதுதான் முதல்வரின் பழக்கம் ஆகையால் அவர்களின் கோரிக்கை பரிசீலனை செய்து முதல்வர் நிறைவேற்றுவார்.

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சிக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது எல்லோருக்குமான ஆட்சியாகவும் நிலையான ஆட்சியாகவும் என் இருப்பதால் அனைவரும் இந்த ஆட்சியை விரும்புகிறார்கள்.

அதனால்தான் ஓபிஎஸ் கூட்டிய கருத்து கேட்பு கூட்டத்தில் அவருடைய மாவட்ட செயலாளர்கள் அதிகம் பேர் திமுகவோடு கூட்டணி சேரலாம் என்று கூறியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக்கான கூட்டணி சேர வேண்டும் என்று நிர்வாகிகள் விரும்புவதாக தகவல் வெளியானது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி தேர்தல் நேரத்தில் குட்டையை பலர் குழப்புவார்கள் என்பது வழக்கம்தான்
அதிக இடங்கள் பெற வேண்டும் என்பதற்காக சிலர் இது போன்ற கருத்துக்களை கூறுவர் அது எதுவும் நடக்காது கடந்த தேர்தலைப் போலவே 26 தேர்தலும் இருக்கும் ஆட்சியை திமுக கூட்டணி பிடிக்கும்.

கரூர் சம்பவத்தில் கரூரில் இருந்தபடியே சிபிஐ விசாரணை செய்து வந்தது. தற்போது டெல்லிக்கு காவல்துறை உயர் அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்துள்ளது அவர்களை அலைக்கழிக்க வேண்டும் என்பதுதான் சிபிஐக்கு கொடுத்த அசைன்மென்ட் அந்த அசைன்மெண்டை அவர்கள் நிறைவேற்றியுள்ளனர்.