தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (ஜனவரி 6) வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது. 2024 ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், புகைப்பட அடையாள அட்டைகளில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல் மற்றும் தரமான புகைப்படங்களை இணைத்தல் போன்ற பணிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் செய்யப்பட்டன.
அக்டோபர் 29-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது, அதன்பிறகு, நவம்பர் 28-ம் தேதி வரை சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் பின்னர் திருத்தங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.













; ?>)
; ?>)
; ?>)