• Thu. Apr 24th, 2025

“அக்னி குஞ்சொன்று கண்டேன்” திரைப்படத்தின் படபிடிப்பு..,

Byஜெ.துரை

Nov 13, 2023

“அக்னி குஞ்சொன்று கண்டேன்” திரைப்படத்தின் படபிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியது. இயக்குனரும், நடிகருமான அகரன். “கேமரா எரர்”என்ற திரைப்படத்தை அடுத்து, கல்வியை ஊக்குவிக்கும் விதமாக “அக்னி குஞ்சொன்று கண்டேன்”
என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணியில் உள்ளது.

இந்தப் படத்தின் கதை,நெய்வேலி பகுதியில் இருக்கிற தொழிற்சாலையில் இருந்து வரும் மாசு காரணமாக,அதைச் சுற்றி வாழும் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள், ஏழை குடும்பங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன. இதனால் படிக்கும் குழந்தைகளின் கல்விக்கு எவ்வாறு தடங்கல்கள் ஏற்படுகிறது.

அதை மீறி அந்த குழந்தைகள் எவ்வாறு படிக்கின்றனர் என்பதை மையமாக வைத்து,குழந்தை கல்வியை ஊக்குவிக்கும் விதமாக, உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் ‘அக்னி குஞ்சொன்று கண்டேன்’. இத் திரைப்படத்தில் நித்திகா, அஸ்வின் குமார், மீனா, யுவராஜா, பெண்ணாடம் சத்யராஜ், சுக யோக குணசேகரன் மற்றும் அகரன் நடித்துள்ளனர்.