
அங்காடி தெரு படத்தில் நடித்து பிரபலமான நடிகை சிந்து இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இன்று காலை உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் நடிகர் கார்த்தி 7,000 ரூபாய் துணைத்தலைவர் பூச்சி முருகன் 3,000 ரூபாய் மொத்தம் 10,000 ரூபாய் தங்களது சொந்த நிதியில் இருந்து வழங்கியுள்ளார்கள்.
இந்த தொகையினை நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் தளபதி தினேஷ் அவர்கள் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி இந்த தொகையினை ஒப்படைத்தார்.