தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியின் ஒன்பதாம் ஆண்டு விழா இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

திரைப்பட நடிகர் பிரபுவை காண்பதற்காக பள்ளியின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமான வருகை தந்திருந்தனர்

நிகழ்ச்சி கலந்து கொண்ட நடிகர் பிரபு பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் தொடர்ந்து பள்ளியின் சார்பாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று மாநில அளவில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்
தொடர்ந்து பள்ளியின் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கும் நடிகர் பிரபு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்
பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய திரைப்பட நடிகர் பிரபு கூறும் போது

எனது தந்தை சிவாஜிகணேசன் பராசக்தி படம் நடிப்பதற்கு முன்பு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ரஹீம் தியேட்டரில் ஆறு மாதம் குடியிருந்தார் அவரின் நாடகங்கள் அங்கு நடத்தப்பட்டது அப்போது பெரியகுளம், தேனி மக்கள் அவரை நன்றாக கவனித்துக் கொண்டனர்

எனது அப்பா மீது நீங்கள் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பின் காரணமாக தான் என்னை இந்த மேடையில் நிற்க வைத்து இருக்கிறது எனது மகனையும் நிற்க வைத்திருப்பது என பழைய நினைவுகள் குறித்து பகிர்ந்தார்
தொடர்ந்து பேசிய அவர் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அவர்கள் விருப்பப்படி விட வேண்டும் அப்போதுதான் அவர்கள் நன்றாக இருப்பார்கள் என தெரிவித்தார்.




