• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

எப்.ஐ.சி.யு.எஸ் இலவச சட்ட உதவி மற்றும் விழுப்புணர்வு முகாம்…

ByKalamegam Viswanathan

Nov 4, 2023

மதுரை இலவச சட்ட உதவி மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் திருநெல்வேலி ஆயிரம் ஃபவுண்டேசன் இணைந்து நடத்திய இலவச சட்ட உதவி மற்றும் விழுப்புணர்வு முகாம் திருநெல்வேலி சுத்தமல்லி சமூதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது.
விழாவுக்கு மானூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன் மற்றும் சுத்தமல்லி ஊராட்சி தலைவர் மேனகா ஆகியோர் தலைமை வகித்தனர். எப்.ஐ.சி.யு.எஸ் நிறுவனர் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவருமான ஆண்டிராஜ், ஆயிரம் ஃபவுண்டேசன் சார்ப்பில் வழக்கறிஞர் செல்வ குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருநெல்வேலி வழக்கறிஞர் உத்தரநாயகம், சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபீர் மற்றும் வழக்கறிஞர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முகாமில் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளான குழந்தைகள், பெண்கள், மாற்று திறனாளிகள், தொழிலாளர்கள், இராணுவ வீரர்கள் உட்பட பலருக்கு இலவச சட்ட உதவிகள் வழங்கப்பட்டது சட்ட விழுப்புணர்வு முகாமும் நடத்தப்பட்டது.