• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உக்கடத்திலிருந்து குறைவான பேருந்துகளே இயக்கம்..!

BySeenu

Jan 10, 2024
தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன.
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் தொ.மு.ச. ஐ.என்.டி.யு.சி., தவிர்த்த தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் எல்.பி.எஃப்., உள்ளிட்ட வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காத தொழிற்சங்கங்களை சேர்ந்த ஓட்டுநர், நடத்துனர்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் கோவையில் நேற்று 90 சதவீதம் பேருந்துகள் இயங்கின. தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்றும் தொடர்கிறது. இதனால் கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து குறைவான பேருந்துகளை தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது வரை உக்கடம் முதல் பணிமனையில் இருந்து 58 பேருந்துகளும் உக்கடம் இரண்டாம் பணிமனையிலிருந்து 66 பேருந்துகளும் வெளியே சென்று உள்ளதாக போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்தனர்.