• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இன்று ஓடிடி-யில் பெண்ணியம் பேசும் திரைப்படங்கள்

Byவிஷா

Mar 8, 2025

இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஓடிடி-யில் பெண்ணியம் பேசும் திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
ஆணுக்கு இருக்கும் சுதந்திரம் பெண்ணிற்க்கும் உண்டு என்பதை உணராத ஏற்றுக்கொள்ளமுடியாது குடும்பத்தில், பல கனவுகளுடன் இருக்கும் பெண் சிக்கிக்கொள்கிறார்கள். சமையல் செய்வது, துணி துவைப்பது, வீட்டை பராமரிப்பது, கணவனின் ஆசையை நிறைவேற்றுவது உள்ளிட்ட வேலைகளுக்கு மட்டுமே தான் பெண் இருக்கிறார்கள் என்று நினைக்கும் கணவன் மற்றும் பெற்றோர்களை விட்டு வெளியேறி தனது கனவை நோக்கி பயணிக்கும் பெண்ணின் காதல் தான் ‘தி க்ரேட் இண்டியன் கிட்சன்’. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான இப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்.


ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண், சாதிய அரசியலால் பல இடங்களில் புறக்கணிக்கப்படுகிறார். இதை அப்பெண் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் கதைக்களம். பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இப்படத்தை நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.


திருமணத்துக்கு பின்னர் பெண்களின் ஆசையை, இலட்சியத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காத ஆண்களுக்கு மத்தியில் தனது லட்சியத்தை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதே இப்படத்தின் கதைக்களம். ஆண் ஆதிக்கத்தை, பெண்களின் மீதான பார்வையை மாற்றியமைக்கும் படம் ‘சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்’. மூன்று பருவ பெண்களின் வாழ்க்கையை காட்டிய ஆந்தாலஜி படமாகும். இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.


வெளிநாட்டில் இறந்து போன கணவரின் உடலை சொந்த ஊருக்கு எப்படி மீட்டு கொண்டுவருவது. அரசு அதிகாரிகளில் கணவனை இழந்த பெண் எப்படி வஞ்சிக்கப்படுகிறார், இறுதியில் எப்படி போராடி வெல்கிறார் என்பதை கபெ ரணசிங்கம் படத்தின் கதைக்களம். ஒரு பெண் சமூகத்தில் எப்படி தைரியமாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்தும் இப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்.


பெண் காவல்துறையினர் அதிலும் கடைநிலை பெண் காவலர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கூறும் படம் ‘மிக மிக அவசரம்’. சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் வெளியான இப்படத்தை ஆஹா ஓடிடி தளத்தில் காணலாம்.


கிராமத்து பெண்ணின் கிரிக்கெட் கனவு எப்படி நிறைவேறுகிறது. ஆண் ஆதிக்கம், அரசியல் சூழ்ச்சி ஆகியவைகளை எதிர்கொண்டு பெண் எப்படி சாதித்து காட்டுகிறார் என்பதை ‘கனா’ படத்தின் கதைக்களம். இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணலாம்.


வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆகவேண்டும் என்ற ஆசியுடன் உள்ள பெண், கணவர், குழந்தை, குடும்ப சூழ்நிலை இவைகளை தண்டி எப்படி வெற்றிபெறுகிறார் என்பதே ‘காற்றின் மொழி’ படத்தின் கதைக்களம். இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணலாம்.


ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற போராடும் பெண் மாவட்ட ஆட்சியர் எதிர்கொள்ளும் அரசியல் ரீதியான பிரச்சனைகளே ‘அறம்’ படமாகும். இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.


ஒரு பெண்ணின் நடத்தை மற்றும் உடல் சார்ந்து எழுப்பப்படும் தவறான விமர்சனங்களை எப்படி எதிகொள்ளவேண்டும் என்பதே ‘அருவி’ படத்தின் கதைக்களம். இப்படத்தை அமேசான் ப்ரைம் மற்றும் சோனி லைவ் ஓடிடியில் காணலாம்.


வறுமை நிலையில் இருக்கும் குடும்பத்தில் இருந்து வரும் ஒரு இளம் பெண் குத்துச்சண்டை வீரராக உருவெடுக்கிறார். குத்துச்சண்டை விளையாட்டில் இருக்கும் அரசியலை மீறி அந்த இளம் பெண் எப்படி வெல்கிறார் என்பதே ‘இறுதி சுற்று’ படத்தின் கதைக்களம். இப்படத்தை சோனி லைவ் ஓடிடி காணலாம்.