• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாமில் குறட்டை விட்ட பெண் டாக்டர்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மானாமதுரை மற்றும் சுற்றியுள்ள 33 கிராமங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். இவர்களை கண், காது, மூக்கு, எலும்பு, நரம்பியல் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் 8 பேர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்து மருந்து மாத்திரைகள் மற்றும் குறைபாடுகளை சதவீதத்தினை ஆய்வு செய்தனர். காலையிலிருந்து ஏராளமான மாற்றுத் திறனாளிகள் பஸ் மற்றும் ஆட்டோக்களில் வந்து நீண்ட நேரம் காத்திருந்து தங்களது குறைபாடுகளை மருத்துவர்களிடம் கூறிக் கொண்டிருந்தனர். அப்பொழுது பெண் மருத்துவர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தவர் அதிக சத்தத்துடன் குறட்டை விட்டு தூங்கியது அனைவரையும் நகைப்படையச் செய்தது. மருத்துவர்களுக்கு துணையாக வந்த மருந்தாளுநர்கள் மற்றும் செவிலியர்களில் சிலர் செல்போன் பார்த்துக்கொண்டு அஜாக்கிரதையாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட மாற்றுத்திறனாளிகளும் அவரது உறவினர்களும் செய்வதறியாது திகைத்தனர். அரசின் நல்ல திட்டங்களை அதிகாரிகள் உரிய அக்கறையுடன் செயல்படுத்தாமல் இவ்வாறு தூங்கி வழிவதால் தமிழக அரசிற்க்கு அவப்பெயர் ஏற்படுவதாகும், இதனை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகளும் அவர்களது உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.