• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

ஜோதிகா முன்னிலையில் சூர்யாவிடம் காதல் கடிதத்தை நீட்டிய பெண் நடன இயக்குநர்

நடிகர் சூர்யாவுக்கு காதல் கடிதம் கொடுத்ததாக பிரபல பெண் நடன இயக்குநரான பாபி கூறியிருக்கிறார்.

நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டரிடம் உதவியாளராக நிறைய சினிமாக்களில் நடன உதவியாளராகப் பணியாற்றியவர் பாபி. சின்ன வயதில் இருந்தே சூர்யாவின் ரசிகையாக இருந்த பாபிக்கு சூர்யா நடித்த ஒரு படத்தில் உதவி நடன இயக்குநராகும் வாய்ப்பு கிடைத்ததையடுத்து அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் தைரியத்தை வரவழைத்து லவ் லெட்டரை சூர்யாவிடம் கொடுத்ததாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் பேபி.

அந்தப் பேட்டியில் பேபி சொல்லும்போது, “நான் பள்ளியில் படிக்கும்போதிலிருந்தே சூர்யாவை ரொம்பவும் பிடிக்கும். ‘காக்க காக்க’ படத்தில் பிருந்தா மாஸ்டருக்கு உதவியாளராக நான் பணி புரிந்தேன்.அப்போது ஒரு நாள் ‘என்னைக் கொஞ்சம் மாற்றி’ பாடல் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தோம். சூர்யாவும், ஜோதிகாவும் ஜீப்பில் வரும் காட்சி படமாக்கிக் கொண்டிருந்தது.

அப்போது ஒரு பேப்பரில் “சூர்யா நீங்கன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் உங்களை காதலிக்கிறேன்…” என்று எழுதி, சூர்யாவிடம் சென்று “உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்” என்று கூறினேன். அதற்கு சூர்யா “சொல்லுங்க பாபி.. என்ன விஷயம்..?” என கேட்டார்.

அப்போது நான் அவரிடம் லெட்டரை நீட்டினேன். “இதில் என்ன இருக்கு..?” என்று கேட்டார் சூர்யா. “நான் உங்களை லவ் பண்றேன் ஸார். இதுல எழுதியிருக்கேன்..” என்று தைரியமாகச் சொன்னேன்.

அதைக் கேட்டு சூர்யா, அங்கிருந்த கேமராமேன், ஜோதிகா, பிருந்தா மாஸ்டர் உட்பட அனைவரும் ஒரு நிமிஷம் திகைத்துவிட்டனர். அப்போது சூர்யா “சாரி பாபி.. நான் ஜோதிகாவை லவ் பண்றேன்…” என்று சிரித்தபடியே கூறினார்.

அப்போது ஜோதிகா, “என்ன பாபி கொஞ்சம் முன்னாடி சொல்லிருக்கலாம்ல…” என்று என்னைக் கிண்டல் செய்தார். அதற்கு நான், “அதனால் இப்போது ஒன்றும் பிரச்சனையில்லை. நான் சூர்யாவை காதலிக்கிறேன்.. நீங்க என்கூடவே வந்திருங்க…” என்று சூர்யாவிடம் நானும் என்று விளையாட்டாக சொன்னேன்” என்று சொல்லியிருக்கிறார் நடன இயக்குநர் பாபி.