• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 17, 2024

நம் வாழ்க்கை அடுத்தவர் திரும்பி
பார்க்கும் அளவிற்கு
இருக்க வேண்டுமே தவிர…
திருத்தி பார்க்கும் அளவிற்கு
இருத்தல் கூடாது..!

வாழ்க்கை குறுகியது வாழுங்கள்..
கோபம் தேவையற்றது அதை
தூக்கி எறியுங்கள்.. பயம்
மோசமானது அதை
எதிர்கொள்ளுங்கள்.. நினைவுகள்
இனிமையானவை அதை ரசியுங்கள்..!

எதையும் மறக்க முயற்சித்து
நிம்மதியை இழக்காதீர்கள்..
அதை அதை அப்படியே
விட்டு விடுங்கள் காலம்
மாற்றி விடும்..!

நீங்கள் பிரச்சனையில் இருக்கும்
போது அது தான் முடிவாக
இருக்குமோ என்று எண்ணாதீர்கள்..
அது வாழ்க்கையில் ஒரு
வளைவான இடம் அவ்வளவு தான்..!

அழகான வீட்டுக்குள் அன்பான
கூட்டுக்குள் அமைதியாய்
காத்திருங்கள்.. சிறகடிக்க காலம்
வரும் போது ஆனந்தமாகவும்..
சுகந்திரமாகவும் பறக்கலாம்..!