• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Mar 14, 2024

1. கடவுளை நம்பிச் சரணடைந்தால் அவர் ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை.

2. கடவுளுக்கு நிகராக வாழ வேண்டுமென்றால் மற்றவர்களை ஏமாற்ற கூடாது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டாலே போதும்.

3. இயற்கையும் இறைவனும் ஒன்றே. நிலம், நீர், தீ, காற்று, வானம், என அவரே எல்லாமுமாக இருக்கிறார்.

4. ஈரமில்லாத மனம் படைத்தவன் இறைவனைக் காண முடியாது. எதிரிக்கும் உதவும் இரக்கம் வேண்டும். மனதில் பாரம் இருந்தால் அதை இறைவனின் தலையில் இறக்கி வைத்து விடுங்கள்.

5. உன் மீது நம்பிக்கை வைக்காமல் ஆயிரம் கடவுள்கள் மீது நம்பிக்கை வைத்து பயனில்லை.

6. உண்டியலில் காசு போட்டு விட்டான் என்பதற்காக கடவுள் ஒருவரையும் காப்பாற்ற மாட்டார்.. போட்டதற்காக இன்னொருவனை தண்டிக்கவும் மாட்டார்.

7. நீ தேடும் கடவுள் உனக்குள்ளே தான் இருக்கிறார்.

8. உனக்கு வந்திருப்பது எவ்வளவு பெரிய துன்பம் என்று இறைவனிடம் சொல்லாதே உனக்கு துணையாக இருப்பவர் எவ்வளவு பெரிய இறைவன் என்று அந்த துன்பத்திடம் சொல்.!

9. உன்னால் இங்கு எதுவும் ஆகாது என உணர்ந்து கொள்.. உன் இறைவன் தான் உன்னை காப்பான் என்று நம்பு.!

10. ஏழைகளை அழ வைத்து அழகு பார்ப்பவன் இறைவன்.. அந்த அழும் நிலையிலும் இறைவனை அழகுபடுத்தி பார்ப்பவன் ஏழை.