
சிந்தனைத்துளிகள்
• பழுத்த இலையொன்று நடனத்தோடு ஒய்யாரமாய் விழுவதில் தெரிகின்றது
மரணத்தின் அதீத அழகு…!
• என் வாழ்க்கையை நான் மட்டுமே மாற்ற முடியும்..
வேறு யாராலும் எனக்காக அதை செய்ய முடியாது!
• நீங்கள் நிற்காத வரைக்கும்,
நீங்கள் பயணிக்கும் தூரம் ஒரு பொருட்டே இல்லை
உங்கள் பயணத்தை தொடருங்கள்…நம்பிக்கையோடு…!
• போர்க்களமென்னும் போட்டிப் பரீட்சையை கடக்க
உனக்குத் தேவை துணையல்ல துணிச்சலே!
• சோதனை இல்லாமல் சாதனை இல்லை….
சாதனையே உந்தன் வாழ்வில் எல்லை
நீ முயற்சித்துப் பாரு முடியாமல் போகாது…!
