

சிந்தனைத் துளிகள்
அன்பான உறவுகளின் காயங்களுக்கு
மருந்தாகவே பயன்படுகிறது பாசம்
கொஞ்சம் அன்பு, கொஞ்சம் அக்கறை
பூர்த்தியாகும் இப்பேரின்ப பெருவாழ்வு
கோபமும் ஒரு வகை அன்பு தான்
அதை அனைவரிடமும் காட்ட முடியாது
நெருங்கியவரிடம் மட்டுமே காட்ட முடியும்
அறிவாக பேசுபவர்களை விட
அன்பாக பேசுபவர்களிடமே மனம்
அதிகமாக பேச விரும்புகிறது
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு
நாம் சிரிக்க வேண்டுமா அல்லது அழ வேண்டுமா
என்ற முடிவெடுக்க நாம் அன்பு வைத்தவர்களால்
மட்டுமே சாத்தியமாகிறது