• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Dec 22, 2022

சிந்தனைத்துளிகள்

பழி சொல்லும் எவரும்.. உனக்கு வழி சொல்லப்போவதில்லை..
உன் வாழ்க்கை.. உன் கையில்.!

நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எல்லாவற்றையும் மாற்றமுடியாது..
எதையும் எதிர் நோக்காவிடில் மாற்றங்களே இருக்காது.!

உனக்கு அனுபவம் ஆயிரம் இருந்தாலும்
அன்பாய் பழகும் ஒருவர் உன்னுடன் இருந்தால்
இந்த உலகமே உனக்கு வசப்பட்டு கிடக்கும்.!

மலரை மட்டும் ரசிப்பதை விட்டுவிட்டு
முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்
வலிகளும் பழகிப்போகும்.!

செல்லும் பாதையில் வரும் தடைகள் வழியை மறப்பவை அல்ல..
அவைகள் தான் உங்கள் வெற்றிப் பாதைக்கு
அழைத்து செல்லும் வழிகள்..!

போராடித் தோற்பதும் வாழ்வின் ஒரு இன்பம் என்பதை மறந்துவிடாதீர்கள்..
எப்போதும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்க கூடாது.!

யார் கடினமாக உழைக்கிறார்களோ
அவர்களுக்கு கடவுள் உதவி செய்கிறார்கள்.