சிந்தனைத்துளிகள்
• தெரியாத விடயங்களை பிறரிடம் கேட்பவன் ஒரு நிமிடம் முட்டாள்
தெரியாத விடயத்தை கேட்காமல் இருப்பவன் வாழ்நாள் முட்டாள்.
• ஒன்றை நீங்கள் அடைய வேண்டும் என்றால்
முயற்சி செய்தால் தோல்வி என தெரிந்திருந்தாலும்
அதை நம்பிக்கையுடன் முயற்சி செய்ய வேண்டும்.
• இந்த வாழ்கை ஒரு முறை தான் அதை சரியாக வாழ்ந்தால் வாழ்க்கை
ஒரு முறையே போதுமாக இருக்கும்.
• எந்த கடினமான சூழ்நிலையிலும் தகுதியும் திறமையும்
கொண்டவர்கள் தப்பி பிழைப்பார்கள்.
• இந்த உலகத்தில் சாதிக்க வேண்டும் என்றால்
மிகையான போராடும் குணம் இருக்க வேண்டும்.