உசிலம்பட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக மது போதையில் பெற்ற மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள துள்ளுக்குட்டிநாயக்கணூர் கிராமத்தைச் சேர்த்தவர் பாண்டி, இவருக்கும் இவரது தந்தை மாரியப்பனுக்கும் குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தாக கூறப்படுகிறது.,
இந்நிலையில் இன்று வழக்கம் போல தந்தை மகன் இருவருமே மது போதையில் இருந்த சூழலில், மகனுடன் தகராறில் ஈடுபட்ட தந்தை ஒரு கட்டத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகனின் கழுத்து பகுதியில் குத்தியதால் மகன் பாண்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.,
தகவலறிந்து விரைந்து வந்த எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய போலீசார் உயிரிழந்த பாண்டி உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு மகனை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தை மாரியப்பனை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,
உசிலம்பட்டி அருகே பெற்ற மகனை மது போதையில் தந்தையே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.,

