• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தடையை மீறி உண்ணாவிரதம்

Byp Kumar

Dec 13, 2022

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரியும் போதை வாஸ்து பொருட்களை ஒழிக்க கோரியும் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தடையை மீறி உண்ணாவிரதம் இருந்த 100க்கும் மேற்பட்டோர் கைது
மதுரை பழங்காநத்தம் பகுதியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாநில துணை பொது செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் ரவி ,மாவட்ட செயலாளர்கள் புறா மோகன், கார்த்திக், சிவாஜி, மற்றும் பஞ்சு மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தில், மகளிர் அணி நாகராணிஆகியோர்கள் முன்னிலையில் சமத்துவமக்கள் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரியும், போதனை பொருட்கள் தடை செய்யக்கோரி தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.100க்கும் மேற்பட்டோர் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


அதன் பின்னர் கட்சியின் மாநில துணை செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது தமிழகத்தில் பூரணம் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டிய போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டிய மக்களின் நலனுக்காகவும் தமிழகத்தின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அன்பு தலைவர் நாட்டாமை அவர்கள் மேற்கொண்டுள்ள இந்த அறவழி போராட்டம் நடைபெற்றது. உடனடியாக தமிழக அரசு பூரணம் மதுவிலக்கையும் அமுல் படுத்த வேண்டும், போதைப் பொருட்களை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் எனக் கூறினார்