மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் தண்டலை கோட்டைமேடு கல்லணை மெய்யப்பன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் முதல் போக சாகுபடி சுமார் 2000 ஏக்கர் அளவில் விளைந்து தற்போது அறுவடை ஆகி வருகிறது கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சில நாட்களாக அறுவடை நடை பெறாமல் இருந்த நிலையில் தற்போது தீபாவளிக்கு பின்பாக ஆங்காங்கே வெயில் அடிக்கும் சூழ்நிலையில் பல்வேறு பகுதிகளில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது

இந்நிலையில் அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததாலும் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருவதாலும் விவசாயிகள் தங்கள் விளைவித்த நெற்களை காப்பாற்ற முடியாமல் தனியாருக்கு விற்று வருகின்றனர்.

இந்த ஆண்டு முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் அதிகப்படியான நெல் விளைந்துள்ள சூழ்நிலையில் தனியார் கமிஷன் கடைகளில் விவசாயிகள் அனுப்பும் நெல்லுக்கு மிக குறைவான விலையே கேட்கின்றனர் ஏற்கனவே மிக அதிக அளவு செலவு செய்து விளைவித்த நெல்லை மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால்
விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுகிறது.
ஆகையால் அலங்காநல்லூர் பகுதி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். மேலும் நெல்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என்று அந்தப் பகுதி விவசாயிகள் பொதுமக்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே அலங்காநல்லூர் குமாரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக நெற்ப்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ள நிலையில் தற்போது கொள்முதல் நிலையம் திறக்காததால் நெல்லை அறுவடை செய்ய முடியாமல் தனியாருக்கு விற்கவேண்டிய அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளது வேதனையை ஏற்படுத்துவதாக இந்த பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.













; ?>)
; ?>)
; ?>)