• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

Byகா.பாபு

Dec 10, 2022

வனத்துறை அலட்சியமாக செயல்படுவதை கண்டித்து எம்.எல்.ஏ தலைமையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகே உள்ள முத்துகல்லூர் பகுதியில் தோகைமலையினை சார்ந்த விவசாயி கருப்பசாமி.
இவர் விவசாயம் மட்டுமின்றி கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வரும் நிலையில், இவரது தோட்டத்தில் நேற்று இரவு கட்டிவைக்கபட்டிருந்த இரண்டு வயது மதிக்கத்தக்க பசுமாட்டு கன்றினை சிறுத்தை ஒன்று கடித்து கொண்டுள்ளது.
இன்று காலை விவசாயி கருப்பசாமி தோட்டத்திற்கு சென்று பார்த்த போது பசுமாட்டு கன்று சிறுத்தை தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் அது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் வர தாமதமானதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அலட்சியமாக வனத்துறை நடப்பதாக கூறி விவசாயிகள் ஒன்றினைந்து தாயனூர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரமடை தாயனூர் சாலையில் உயிரிழந்த கன்று குட்டியை சாலையில் போட்டு வனத்துறை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
தொடர்ந்து தாயனூர்,வெள்ளியங்காடு,முத்துக்கல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களில் நுழையும் சிறுத்தை கால்நடைகளையும் தோட்டங்களில் உள்ள நாய்களையும் வேட்டையாடி வருகிறது.
இதுவரை 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் நாய்களை வேட்டையாடி வருவதால் விவசாயிகளுக்கும் கால்நடைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க கோரி போராட்டம் நடைப்பெற்றது.
மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ ஏ.கே செலல்வராஜ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர் இதன்காரணமாக காரமடை தாயனூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து தகவல் அறிந்த காரமடை போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்
மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சர்மிளா முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கால்நடைகளை தாக்கும் சிறுத்தையை பிடிக்க உடனடியாக கூண்டு வைக்க பிடிக்கப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.