அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி, 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல் மூட்டை விற்பனை லஞ்சம் கொடுக்க முடியாது எனக் கூறியதால் மூடப்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிறுப்பாக்கம் கிராமத்தில் சுமார் 5000 ஏக்கரில் விவசாயிகள் குருவை நெற்பயிர் சாகுபடி செய்து உள்ளனர். நெருப்பயிர் கதிர் விட்டு தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் ஒரு சில இடங்களில் அறுவடை பணியானது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அங்குள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் ஆத்திரமடைந்த சுமார் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தியும் கோசங்கள் எழுப்பியும் வருகின்றனர்.
மேலும், அரசு அதிகாரிகளுக்கு நெல் கொள்முதல் செய்வதற்காக மூட்டைக்கு லஞ்சம் தர முடியாது என விவசாயிகள் கூறியதால், மூடப்பட்டிருப்பதாகவும் இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டானது எழுந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த சிறுபாக்கம் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.