கோவை மாவட்டம் இருகூரில் இருந்து பெங்களூரு வரை திருப்பூர் மாவட்டம் வழியாக IDPL நிறுவனம் எண்ணெய் குழாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.விவசாய நிலம் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 130 வது நாளாக விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கோவை முதல் கர்நாடகா வரை பெட்ரோலிய குழாய் கொண்டு செல்லும் திட்டத்தில் கோவையிலிருந்து முத்தூர் வரை 70 கிலோமீட்டர் விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டது. முத்தூரிலிருந்து பெங்களூரு வரை சாலையோரமாக எண்ணெய் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது.மீண்டும் தற்போது கோவையில் இருந்து முத்தூர் வரை 70 கிலோமீட்டர் ஏற்கனவே எரிவாயு குழாய் பதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களின் வழியே மீண்டும் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எரிவாயு குழாய் திட்டத்தை சாலை ஓரமாக செயல்படுத்த வலியுறுத்தி பல்லடம் அருகே சுக்கம்பாளையம், கோடாங்கி பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் 130 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய்களை பதிப்பதால் நிலத்தின் மதிப்பு குறைவதாகவும், விவசாயம் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும், வங்கிகளில் கடன் பெற முடியாத சூழல் நிலவுவதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
மத்திய மாநில அமைச்சர்களை சந்தித்து மனு அளித்தும் பயனில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.சாலையோரமாக எண்ணெய் குழாயை அமைக்கும் வரை போராட்டத்தை தொடர போவதாக விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். மேலும் திருப்பூருக்கு வந்த துணை முதல்வரை சந்தித்து மனுக்கள் கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை என விவசாயிகள் வேதனை தெறிவித்துள்ளனர். மேலும் ஆட்சியில் உள்ள திமுக விற்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பினர் .