• Mon. Mar 9th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

கர்னல் ஜான் பென்னி குவிக் திருவுருவ சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து அஞ்சலி..,

மதுரை, தேனி, திண்டுக்கல, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்கை தென் தமிழக மக்கள் மனித கடவுளாக பாவித்து அவரை வணங்கி வருகின்றனர் .

கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்த தினம் மற்றும் நினைவு தினத்தை தென் தமிழக மக்கள் வெகு விமர்சையாக அனுசரித்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று மறைந்த கர்னல் ஜான் பென்னி குவிக் அவர்களின் 115- வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனை அடுத்து விவசாய சங்கத்தினர் மற்றும் கம்பம், கூடலுர் பகுதி விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் லோயர்கேம்ப்பில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுய்க் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தி,மெழுகுபத்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.