மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி வருவாய் கிராமத்தில் தேனி வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி,உசிலம்பட்டி குழு மாணவர்கள் சார்பில் விவசாயிகள் கூட்டம் நடத்தப்பட்டது அகினோ , தருண் , பிரவீன் , சஞ்சய், இளங்கோ, தர்சன், முத்தையா, அருண்,ஹரி,மார்ஃபான்,சஞ்சய் கார்த்திக்,சசி,விநாயக்,கிக்ஷோர் ஆகியோர் இக்கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினர். இச்சந்திப்பில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு, தங்களின் அனுபவங்களையும், விவசாயத்தில் எதிர்கொள்ளும் சவால்களையும் பகிர்ந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், நவீன விவசாய தொழில்நுட்பங்கள், உயர் மகசூல் தரும் விதைகள், மண் பரிசோதனையின் அவசியம், நீர்சேமிப்பு முறைகள், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் இயற்கை விவசாய முறைகள் குறித்து விளக்கினர். மேலும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு மாணவர்கள் தெளிவான விளக்கங்களை வழங்கினர். இந்த சந்திப்பு, விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையே அறிவுப் பரிமாற்றத்தை மேம்படுத்தி, நடைமுறை சார்ந்த தீர்வுகளை அறிந்துகொள்ள உதவியதாக விவசாயிகள் பாராட்டினர்.





