புதுக்கோட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கடந்த அதிமுக ஆட்சியில் 7000 கோடி ரூபாய்க்கு திட்டம் தயாரிக்கப்பட்டு அனுமதி அளித்து முதல் பட்ஜெட்டிலேயே 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திட்டத்தை தொடங்கி வைத்தார் ஆனால் அதன் பிறகு வந்த திமுக அரசு இதுவரை நான்கு ஆண்டுகள் முடிந்த பிறகும் ஒரு நிதி கூட ஒதுக்கவில்லை இது கண்டனத்துக்குரியது தமிழக அரசு எத்தனை போக்கை கண்டித்து அதிமுக மற்றும் விவசாய அமைப்புகளை ஒன்று சேர்த்து புதுக்கோட்டையில் இந்த பணிகளை விரைவு படுத்த வேண்டும் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதல் பெற்று தேதி அறிவிக்கப்படும்

அதேபோன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெல்டா மாவட்டங்களில் ஒன்றிணைத்து அந்த மாவட்ட மக்களும் பயன்பெற வேண்டும் என்பது நோக்கத்திற்காக 90 கோடி ரூபாய் மதிப்பில் சிறுநீரக ஒப்பு உயர்வு மையம் அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது கொரோனா காலத்தில் அந்த கட்டிடத்தில் கொரோனாவாடாக செயல்பட்டது

சிறுநீரக ஒப்புதல் மையத்தை திமுக அரசு திறக்கவே இல்லை
தற்போது சிறுநீரக பாதிப்பு என்பது அதிகரித்து வருவதால் ஒப்பு உயர்வு மையம் செயல்பட்டிருந்தால் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதையும் திமுக அரசு செய்யவில்லை
அதேபோன்று மின்சாரத் துறையில் டிரான்ஸ்பார்மர் கல் அதிக அளவு பல்கலைந்து வருகிறது ஆனால் ட்ரான்ஸ்பார்மரை மாற்றுவதற்கு புதிய டிரான்ஸ்பார்மர்கள் வாங்கப்படாதால் மாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் மட்டுமல்ல அது விவசாயிகளும் பெறுதளவு பாதிக்கப்பட்டுள்ளனர்
புதிய ட்ரான்ஸா மாறுதல் வாங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
அரசு மருத்துவமனைகளில் வருபவர்கள் ஏழை எளிய மக்கள் எனவே அவர்களுக்கு சிகிச்சை முறையாக உடனடியாக அளிக்க வேண்டும் அதேபோன்று காப்பீட்டு திட்டத்தில் பயப்படுவதற்கு ஒப்புதல் உடனடியாக வழங்க வேண்டும்
அதிமுக ஆட்சி காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது முதல் கடமையாக இருந்தது அதன் பிறகு காப்பீடு ஒப்புதல் அளிக்கப்பட்டு நிதி வழங்கப்பட்டு வந்தது ஆனால் திமுக அரசின் காப்பீடு ஒப்புதல் முதலில் அதன் பிறகுதான் சிகிச்சை என்ற நிலை உள்ளது அது மாறவேண்டும்
புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களுக்கு பே வார்டு பொதுமக்களிடம் வரவேற்பு இருக்காது
மருத்துவ காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறுவது ஏற்படுவது அல்ல மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு நிரந்தர பணியாளர்கள் மருத்துவர்கள் நியமனம் செய்வதை தான் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் ஆனால் இந்த அரசு ஏஜென்சி மூலமாக தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்வதை ஊக்குவித்து அந்த கருத்தை சுகாதாரத் துறை அமைச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டது என்று கூறுவது ஏற்புடையது அல்ல
நான் தொடர்ந்து கூறி வருகிறேன் சுகாதாரத்துறை ஐ சி யூ வில் இருக்கு என்று அது தற்போது நிறுவனம் ஆகிக்கொண்டே தான் வருகிறது
சமூக வலைதளங்களில் மாணவிகள் மது அருந்துவது போன்று வீடியோக்கள் வருவது மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது அரசு இதை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தெரியவில்லை தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் வருகிறது. இந்த சமூகம் எங்கே சென்று கொண்டுள்ளது அரசு என்ன தடுப்பதற்கு செய்துள்ளது என்பதை தான் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அண்மையில் நடைபெற்ற பொது குழுவில் மிகச் சிறப்பான செய்தியை தேர்தல் குறித்து எடப்பாடி யார் கூறியுள்ளார் தேர்தல் களம் அரசியல் களம் சூடு பிடித்து விட்டது
அதிமுக என்பது மிகப்பெரிய இயக்கம் எல்லா சோதனையும் தாண்டி சாகா வரம் பெற்ற இயக்கம் அதிமுக தற்போது உள்ள அரசு மீது மக்கள் மிகப்பெரிய அதிருப்தியில் உள்ளனர் அது அதிமுகவிற்கு சாதகம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி
எடப்பாடி முதலமைச்சராக வருவார்
செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து பலர் வருவார்கள் என்று கூறியுள்ளது குறித்து பதில் அளித்த விஜய் பாஸ்கர்
அதிமுக என்பது மிகப் பெரிய ஆலமரம்
ஆலமரத்தில் பல்வேறு பறவைகள் வரும் பிறகு போய்விடும்
அதிமுக என்கிற ஆலமரம் எங்கேயும் போய்விடாது அங்கேதான் இருக்கும்.
அது போன்று தான் அதிமுக ஆலமரத்தில் இருந்து சிலர் பறந்து போய் இருக்கலாம் அதற்காக அதிமுக துவண்டு விடாது அனைத்தையும் கடந்து வந்து வெற்றி பெற்ற இயக்கம் தான் அதிமுக
திமுக கூட்டணி பலமாக உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர் ஆனால் மக்கள் மனதில் அரசு மீது அதிருப்தி உள்ளது 2026 தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும்
ஒவ்வொரு கட்சியும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று தான் கூறுவார்கள் களத்தில் நிலவரப்படி அதிமுக இந்த பெரிய வெற்றி பெறும்….
ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் டோக்கன் வழங்குவதை சென்ற ஆண்டு போன்று மாவட்ட நிர்வாகம் தடை செய்ய வேண்டும்
ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள் தயாராகி வருகிறது
இந்த ஆண்டு தேர்தல் வருவதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி ஜல்லிக்கட்டை தடை செய்யக்கூடாது தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்பது வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது என்பது வேறு ஜல்லிக்கட்டு என்பது நமது பாரம்பரிய விழா அதை தேர்தலை காரணம் காட்டி நிறுத்தி விடக்கூடாது
தேர்தல் களத்தில் அதிமுக இருக்கும்போது களத்தில் உள்ள அனைவரையும் எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது




