• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாசன கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Apr 24, 2025

மதுரை மாவட்டம் தேனூர் கிராமம் முழுவதும் விவசாயத்தை நம்பியுள்ள பகுதி. இங்கு அதிகப்படியாக நெல் பயிரிடப்பட்டு வருகிறது. தேனூர் பகுதியில் விவசாயத்திற்காக குறிப்பிட்ட அளவு நீரானது சோழவந்தான் பேட்டை பகுதியிலுள்ள வைகை ஆற்றில் இருந்து பிரியும் தேனூர் கால்வாயில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த கால்வாய் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாராமல் பராமரிக்கப்படாத நிலையில் ஆகாயத்தாமரை மற்றும் மதகுகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத அளவு உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தான் விவசாயத்திற்காக இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தூர்வாரப்பட்டு விவசாயத்திற்காக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.

இந்த கால்வாய் சோழவந்தான் பேட்டையில் இருந்து ஆரம்பித்து சோழவந்தான் புறநகர் பகுதி தசச்சம்பத்து, திருவேடகம், வழியாக சென்று தேனூர் பகுதியை அடைகிறது.
இந்த கால்வாய் மூலம் தேனுர் கிராமத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன் பெற்று வந்தது.

தற்போதுஇந்த கால்வாயானது போதிய பராமரிப்பின்றி மணல் மூடியும், ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. அதன் காரணமாக கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு 300க்கு மேற்பட்ட ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கால்வாயில் படந்துள்ள ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்தி சேதமடைந்துள்ள மதகுகளையும் சரி செய்ய வேண்டும் என இந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் தேனூர் கால்வாயை நேரில் பார்வையிட்டு வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் முன் தூர்வார ஆவண செய்ய வேண்டும் என்று தேனூர் கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.