• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விவசாய நிலங்களுக்குள் மின் வயர்கள் விவசாயிகள் புகார் ..,

ByKalamegam Viswanathan

Aug 19, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கண்மாய் கரையில் முத்தையா கோவில் செல்லும் வழியில் ஆபத்தான நிலையில் விவசாய பகுதிகளுக்குள் மின் வயர்கள் இருப்பதால் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பகுதியில் உள்ள மின் கம்பத்திலிருந்து விவசாயப் பகுதிகளுக்கு செல்லும் மின் வயர்கள் தரையில் செடி கொடிகளுக்கு மத்தியில் இருப்பதாகவும் கால்நடைகளை வளர்ப்பவர்கள் மேச்சலுக்கு செல்லும்போது விவசாய செடிகளை உட்கொள்ளும் கால்நடைகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாகவும் மேலும் கால்நடைகளை பராமரிப்பவர்கள் விவசாய நிலங்களுக்குள் செல்லும்போது மின்சாரம் தாக்கி உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஆகையால் உயிர் பலி ஏற்படும் மின் வயர்களை அப்புறப்படுத்த வேண்டும் தாழ்வான பகுதிகளில் செல்லும் மின் வயர்களை பாதுகாப்பான வழியில் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.