• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தக்காளி விலை குறைவால் விவசாயிகள் வேதனை..,

ByK Kaliraj

Mar 25, 2025

சின்னக்காமன்பட்டி பாறைப்பட்டி செங்கமல நாச்சியார்புரம் கீழத்திருத்தங்கள் அனுப்புங்க குளம் அதிவீரன்பட்டி வடமலாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில்எட்ட தக்காளி அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வரை தக்காளி கிலோ 18 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு ஓரளவிற்கு லாபம் கிடைத்தது இந்நிலையில் தற்போது தக்காளி கிலோ 6 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால். விவசாயிகள் அதிர்ச்சியுடன் வேதனை அடைந்து வருகின்றனர்.

இதனால் பறிப்பு கூலி கூட கொடுக்க முடியாமல் செடிகளிலேயே விட்டு வருகின்றனர். இல்லாவிட்டால் கால்நடைகளை உணவுக்காக மேய விடுகின்றனர். கிணற்றில் உள்ள குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி கஷ்டப்பட்டு விவசாயம் செய்ததும் விலை குறைவால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.இதற்கு தமிழக அரசு உரிய நஷ்ட ஈடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எட்டக்காபட்டி விவசாயி பரந்தாமன் கூறியது சந்தையில் எப்போதும் தக்காளிக்கு வரவேற்பு இருப்பதால் தொடர்ந்து கங்கர்சேவல், எதிர்கோட்டை, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வரை தக்காளி கிலோ 18 ரூபாய் விலை கிடைத்தது ஆனால் தற்போது ரூபாய் கிலோ பத்து ரூபாய் குறைந்து பெரும் எட்டு ரூபாயாக குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்துள்ளோம். வியாபாரிகள் கடையில் கிலோ 30 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.

ஆனால், விளை நிலங்களுக்கு வந்து வாங்கும் வியாபாரிகள் சந்தையில் வரவேற்பு இல்லாததால் விலை குறைந்துள்ளதாக காரணம் காட்டி விலையை குறைத்து வருகின்றனர். தமிழக அரசிடம் பல ஆண்டுகளாக விவசாயிகள் விலை பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும், உழவர் சந்தைகள் திறக்கப்பட வேண்டும் என கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே இந்த நிலை மாறும் என கூறினார்.