மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாம் போக நெல் நடவு பணிகள் தற்போது முடிந்த நிலையில் நடவு செய்த நெல் பயிர்கள் வளர்ந்து சுமார் 50க்கும் மேற்பட்ட நாட்களாகும் நிலையில் பயிர்களில் செவட்டை நோய் தாக்குவதால் விவசாயிகள் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக தென்கரை ஊராட்சி ஊத்துக்குளி நாராயணபுரம் மேல மட்டையான் உள்ளிட்ட பகுதிகளில் தென்கரை கண்மாய் பாசன மூலமும் பெரியார் கால்வாய் பாசன மூலமும் நெல் நடவு செய்த சுமார் 500க்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் செவட்டை நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில இடங்களில் நடவு செய்த நெல்கள் நடவு செய்த ஒரு மாதத்திலேயே சிவப்பு கலரில் மாறி வருகிறது மேலும் அறுவடைக்கு தயாராக உள்ள சில இடங்களில் நெற்பயிர்கள் செவட்டை நோய் தாக்குதலால் அறுவடை செய்ய முடியாத நிலையில் ஆடு மாடுகளை மேய விட்டு அழிக்கும் சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஊத்துக்குளி கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான சுமார் 10க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்த நெற் பயிர்கள் செவட்டை நோய் தாக்குதல் காரணமாக ஏக்கருக்கு சுமார் 30,000 முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்த ராமலிங்கம் என்பவர் சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சில தினங்களுக்கு முன்பு ஊத்துக்குளி கிராமத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தந்த சோழவந்தான் எம்எல்ஏவிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில் அது குறித்து அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றுள்ளார் என தெரிவித்தார்.
ஆகையால் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி ஊத்துக்குளி நாராயணபுரம் மேல மட்டையான்ஆகிய பகுதிகளில் நடவு செய்த நெற்பயிர்களில் தற்போதைய நிலையை ஆய்வு செய்து செவட்டை நோய்கள் தாக்கியுள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




