தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (40) இவர் அதே பகுதியில் இரண்டு ஏக்கரில் வாழை விவசாயம் செய்து வருகின்றார்.

இந்நிலையில் தனது உறவினரான வருசநாடு பகுதியை சேர்ந்த மகேஷ்வரி என்பவர் மூர்த்தி பயிரிட்ட இடம் தனக்கு சொந்தமான இடம் என கூறி இரண்டு ஏக்கரில் பயிரிட்ட வாழையை முழுவதுமாக அழித்துள்ளதாகவும்.

இது குறித்து மூர்த்தி ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், அந்த புகார் மீது காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த மூர்த்தி உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
இதனை பார்த்த அங்கிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.













; ?>)
; ?>)
; ?>)