மதுரையில் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் 27 திரையரங்கில் வெளியான நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். அரசடி சோலைமலை தியேட்டர் முன்பு சாலையில் அலப்பறை செய்த ரசிகர்கள் பட்டாசு வெடிக்க முயன்ற நிலையில் லத்தி அடி கொடுத்து விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ள விடா முயற்சி திரைப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தபடத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து தமிழக முழுவதும் இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சி வெளியாகியது
2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு படமும் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அஜித் நடித்துள்ள படம் திரையரங்கில் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் திரையரங்கில் ஆரவாரம் செய்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
மதுரையில் 27 திரையரங்கில் “விடாமுயற்சி” திரைப்படம் வெளியாகியது. மதுரை அரசரடி பகுதியில் உள்ள சோலை மலை திரையரங்கில் ரசிகர்கள் மேளதாளங்கள் முழங்க கொண்டாடினர்.

அடங்காத அஜித் குரூப், தூங்காநகரம் அஜித் ஃபேன்ஸ் என்ன பல்வேறு அஜித் ரசிகர்கள் திரையரங்கம் முன்பு ஆளுயர கட் அவுட் வைத்து அதற்கு பால் அபிஷேகம் செய்தனர. சில ரசிகர்கள் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சோலைமலை திரையரங்கு வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேளதாளம் முழங்க ஊர்வலமாக இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தபடியே வந்தனர் குறிப்பாக ஒரு இருசக்கர வாகனத்தில்
TN59AH6872 பதிவு எண் கொண்டு வந்த இளைஞர் ஒருவர் எதிரே வரும் எதிரே வரும் வாகனங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தை வீலிங் செய்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
மேலும், திரையரங்கம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட முற்பட்டபோது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை கத்தியால் அடித்து சரவெடி பட்டாசை பிடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.