• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ரஜினியின் சிலைக்கு ரசிகரின் குடும்பத்தினர் வழிபாடு..,

ByKalamegam Viswanathan

Dec 12, 2023

ரஜினியின் 73 வது பிறந்த நாளை ஒட்டி, திருமங்கலத்தில் உள்ள 250 கிலோ எடை கொண்ட கருங்கலினால் ஆன, மூன்று அடி உயர ரஜினியின் சிலைக்கு கடவுள் போன்று திருவாச்சி அமைத்து, ரஜினி ரசிகரின் குடும்பத்தினர் வழிபாடு.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ரஜினி ரசிகரான திருமண தகவல் மையம் தொழில் நடத்தி வரும் 50 வயது கொண்ட கார்த்திக் என்பவர், கடந்த மூன்று ஆண்டு காலமாகவே, வாடகைக் கட்டிடமான தொழில் நிறுவனத்தில் தனியாக ஒரு அறை எடுத்து, அதில் ரஜினியின் பல்வேறு படங்களில் உள்ள உருவங்களை போஸ்டராக ஓட்டப்பட்டு, ரஜினி கோவில் என பெயரிட்டு ரஜினியின் படத்திற்கு நாள்தோறும் ஆறு வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் செய்து வழிபட்டு வரும் கார்த்திக் ,
தனது குடும்பத்தினருடன் இன்று அவருடைய 73 வது பிறந்த நாளை முன்னிட்டு. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் 250 கிலோ எடை கொண்ட கருங்கல்லாலான மூன்றடி உயர ரஜினியின் சிலைக்கு. கடவுள் போன்ற திருவாச்சி அமைத்து மின்விளக்குகளால் அலங்கரித்தும், ரஜினியுடைய சிலைக்கு பால் , பன்னீர் , இளநீர், சந்தனம் , தேன் உள்ளிட்ட ஆறு வகையான அபிஷேகங்கள் செய்து வழிபட்டார்.

மேலும், ரஜினி பல்லாண்டு நீடூடி வாழவும் தனது குடும்பத்தினருடன் பிரார்த்தனை செய்து கொண்டனர் .ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், 73 மொழிகளில் வாழ்த்துக்கள் கூறி, அதற்கான பிளக்ஸ் பேனரும் அமைக்கப்பட்டிருந்தது.
விரைவில் ரஜினிக்காக சொந்த இடம் வாங்கி அதில் கட்டிடம் கட்டி ரஜினி கோவில் என பெயரிட்டு வழிபட உள்ளதாகவும், திட்டம் திட்டி உள்ளதாக கார்த்திக் தெரிவித்தார். ரஜினியின் பிறந்த தினமான இன்று , பள்ளி சிறுவர், சிறுமிகளுக்கு அன்னதானமும் வழங்கி மகிழ்ந்தார்.