• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பிரபல இயக்குனர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடி உடைப்பு

ByA.Tamilselvan

Oct 29, 2022

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புலன்விசாரணை, கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி, மக்களாட்சி, ராஜமுத்திரை, அரசியல், ராஜஸ்தான், குற்றப்பத்திரிகை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் ஆர். கே.செல்வமணி. இவர் நடிகை மற்றும் ஆந்திர மாநிலத்தின் அமைச்சருமான ரோஜாவின் கணவர். இவர் தற்போது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவராக உள்ளார். விருகம்பாக்கத்தில் இவர் வசித்து வருகிறார். சென்னை விருகம்பாக்கத்தில் ஆர்.கே. செல்வமணியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.