• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு…

BySeenu

Nov 21, 2023

ஒவ்வொரு வருடமும் குடும்ப நலத்துறையின் சார்பில் நவம்பர் 21ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை உலக நவீன வாசக்டமி இரு வார விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இன்று கோவை மருத்துவத்துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் வாசக்கமி விழிப்புணர்வு ரதத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ரதம் மாவட்டத்தின் முக்கிய இடங்களான ரயில் நிலையம் பேருந்து நிலையம் மருத்துவ கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும். அனைத்து வேலை நாட்களிலும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 4 வரை அரசு ஊக்கத் தொகையாக ரூ.1,100 கோவை மாநகராட்சி ஆணையாளர் சார்பில் ரூ 1000 மற்றும் கோயமுத்தூர் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ரூ 1000 ஆக மொத்தம் 3,100 ரூபாய் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த நிகழ்வில் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா, சுகாதார பணி இணை இயக்குனர் அருணா, நகர்நல மருத்துவர் தாமோதரன் உட்பட மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.