கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கன்ஸ்யூமர் வாய்ஸ் ஆப் கன்னியாகுமரி சார்பில் முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு இப்பள்ளியின் தலைமை ஆசிரியை பிரசன்னா தலைமை வகித்தார். கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கன்ஸ்யூமர் வாய்ஸ் ஆப் செயலாளர் மெல்கியாஸ், பொருளாளர் சமூக ஆர்வலர் சின்னமுட்டம் ஜெயசிறில் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு முகக்கவசம் வழங்கினர். இதில் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மாணவிகள் பொதுவெளியில் மற்றும் வகுப்பறையிலும் மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்தே இருக்கும் பழக்கத்தை தொடரவேண்டும் என்பதை வற்புறுத்தினார்கள்.








