தமிழ்நாடு துனை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பம்மல் தெற்கு பகுதி திமுக சார்பில் கண் சிகிச்சை முகாம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

பம்மல் தெற்கு பகுதி கழகத் தலைமையில், மண்டல குழுத் தலைவர் மற்றும் பகுதி செயலாளர் வே. கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், மாமன்ற உறுப்பினர் டில்லி கல்யாணி வரவேற்புரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் தா.மோ. அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி, தாம்பரம் மாநகர மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் வடக்கு பகுதி செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்று முகாமை தொடங்கிவைத்தனர்.

மருத்துவர்கள் பார்வை குறைபாடு உள்ளவர்களை பரிசோதித்து, 500-க்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு இலவசமாக கண்கண்ணாடிகள் வழங்கினர்.
மேலும், மாமன்ற உறுப்பினர்கள் மதினாபேகம், சத்யா மதியழகன், சத்யபிரபு, பம்மல் தெற்கு பகுதி திமுக நிர்வாகிகள், மகளிரணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.




