மதுரை செல்லூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கமயில் ஜீவல்லரி, செல்லூர் வட்டார களஞ்சியம், அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பாக கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கண்ணில் புரை உள்ளவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டது. மேலும் மூக்கு கண்ணாடி தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கபட்டது. இந்நிகழ்வில் டான் பவுண்டேஷன் மதுரை நகர்ப்புற மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆபிரஹாம் ஸ்டான்லி, செல்லூர் வட்டார களஞ்சிய ஒருங்கிணைப்பாளர் பாலமுரளி, ஜெய்ஹிந்த்புரம் சுகம் வட்டார களஞ்சிய ஒருங்கிணைப்பாளர் பென்னிராபின்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.