• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தென் மாவட்டங்களுக்கு ரயில்சேவை நீட்டிப்பு

Byவிஷா

May 29, 2024

தென்மாவட்டங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக சென்னை எழும்பூர் மற்றும் நெல்லை இடையேயான வாராந்திர சிறப்பு முறையில் சேவை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தொலைதூர பயணங்களுக்கு நடுத்தர மக்களின் ஒரே சாய்ஸாக இருப்பது ரயில்கள் தான். குறைவான பணத்தில் நீண்ட தூரம் பாதுகாப்பான பயணத்திற்கு ரயில்களே ஆதாரமாக தற்போது வரை இருந்து வருகின்றன. மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்கலாம் என்பதால் பலரும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை எழும்பூர் மற்றும் நெல்லை இடையேயான வாராந்திர சிறப்பு முறையில் சேவை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 6, 13, 20, 27 தேதிகளில் நெல்லையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு எழும்பூர் வந்து சேரும். மறு மார்க்கத்தில் எழும்பூரில் இருந்து ஜூன் 7, 14, 21, 28 தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.