• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Byமதி

Nov 25, 2021

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், உடல்நிலை மற்றும் சிகிச்சை காரணமாக பரோலில் வெளிவந்த அவர் தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டை வந்து தங்கியிருக்கிறார். இந்நிலையில், அவரது பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக கடந்த மே 19 அவருக்கு விடுப்பு கொடுத்திருந்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன் பிறகு பலமுறை பரோல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.