தென்காசி மாவட்டம், குற்றால அருவிகளில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் வெளியிடடுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
மாவட்டத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் குளிக்க தடை விதித்து ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும், கனமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு
