• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

எம்எல்ஏவுக்காக 2 மணி நேரம் காத்திருந்த கர்ப்பிணி தாய்மார்கள்

ByKalamegam Viswanathan

Mar 5, 2025

மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வந்த எம் எல் ஏவால் கர்ப்பிணி பெண்கள் கடும் சிரமம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் மஹாலில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் என சமூக நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது இதற்காக சுமார் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் காலை 10 மணி முதல் தங்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் மகாலுக்கு வந்திருந்த நிலையில் நிகழ்ச்சிக்கு வர வேண்டிய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் 12 மணி வரை வராததால் கர்ப்பிணி தாய்மார்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள் மற்ற நிகழ்ச்சிகளுக்கும் தாமதமாக வருவதால் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வரும் நிலையில்

தற்போது கர்ப்பிணி தாய்மார்களை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காக்க வைத்துள்ளது அங்கிருந்த பெண்கள் மற்றும் பெற்றோர்களிடையே கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது இது குறித்து கட்சியினரிடம் கேட்டபோது ஏற்கனவே இரண்டு நிகழ்ச்சிகள் எம்எல்ஏவுக்கு இருந்ததால் வர தாமதமானதாக கூறினர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் ஏற்பாட்டாளர்கள் செய்யும் குளறுபடியால் பொதுமக்கள் மற்றும் பெண்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள் கர்ப்பணிகளுக்கான நிகழ்ச்சிகளை முதலில் நடத்திவிட்டு பின்னர் மற்ற நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தால் இதுபோன்ற சிரமங்களை தவிர்த்தீர்களாம் மேலும் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மகாலில் சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ள சூழ்நிலையில் மூச்சு விட கூட சிரமம் ஏற்பட்ட நிலையில் மகாலுக்குள் இருந்தது. அவர்களை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது இனிவரும் காலங்களிலாவது பொதுமக்களின் நலம் கருதி நிகழ்ச்சிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தி முடிக்கவேண்டும் மற்றும் குறிப்பிட்ட நேரத்திற்குள் சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சிகளில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.