

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், முதல்வரின் காலை உணவுத் திட்டம், ஆகஸ்ட் 25 முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில் காலை உணவு திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டம் மூலமாக மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில் முதல்வரின் காலை உணவு திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் விரிவு படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் தற்போதைய நிதிநிலை அறிக்கையில் மாணவர்களின் வருகை மற்றும் செயல் திறன் இந்த திட்டத்தின் மூலம் அதிகரித்துள்ள நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தது. இந்தத் திட்டத்தை விரிவு படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது உள்ளூரில் கிடைக்கும் சிறு தானியங்களை கொண்ட காலை உணவு வழங்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு காலை 8 மணி முதல் 8.50 மணி வரை உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
