• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா..,

BySeenu

Aug 16, 2025

கோயம்புத்தூர், ஆகஸ்ட் 15, 2025 – கோவை சீரப்பாளையத்தில் உள்ள வேதாந்தா அகாடமி சிபிஎஸ்இ பள்ளியில் கோலாகலமாக 79-வது சுதந்திர தினச் சிறப்பு கண்காட்சி மற்றும் ஆடிமாத அற்புத உணவுத் திருவிழா நடைபெற்றது.
சுதந்திர தினவிழாவிற்கு, சிறப்பு விருந்தினர்களான தாளாளர் திரு. ஓம் சரவணன், தலைவர் திரு. சிவகுமார், இயக்குனர் திரு. சுதர்ஷன் ராவ் அனைவரும் தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கி கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர்.

இவ்விழாவில் பைக் சவாரி, ஷ_ட்டிங் ரேஞ்ச், 3டி நிகழ்ச்சி விண்வெளி அருங்காட்சியகம், வில்வித்தை, விளையாட்டுக்கடைகள், மாயாஜால நிகழ்ச்சி, ரயில் வண்டி சவாரி, அலுவலகப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பெற்றோர்கள், மாணவ மாணவியர், பள்ளி ஊழியர் அனைவரும் போட்டி போட்டு கொண்டு நாவிற்கு சுவையூட்டும் அற்புத உணவு பண்டங்களையும், சுவையூட்டும் பானங்களையும் அனைவருக்கும் காலை முதல் மாலை வரை மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் வழங்கி விழாவினை மேலும் மேலும் மெருகூட்டினர் வந்தவர் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர் விழா இனிதே முடிவுற்றது.